மின்கம்பம் மாற்றப்பட்டது

Update: 2024-12-01 08:55 GMT

இறச்சகுளம் விஷ்ணுபுரத்தில் இருந்து ஒரு தனியார் கல்லூரி வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒரு மின்கம்பத்தின் மேல்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்பட்டது. இதனால், எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் மாணவ-மாணவிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டிருந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நட்டனர். செய்தியை வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அந்த பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்