திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி செல்லும் சாலையில் நீதிமன்றம் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு முன்பாக சாலையில் உள்ள 2 மின் கம்பங்களில் மின் விளக்குகள் எரியவில்லை. இதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனைக்கு அருகே உள்ள 2 மின்கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்குகளும் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் இந்த வழியாக இரவு நேரத்தில் பெண்கள் மற்றும் முதியவர்கள் செல்ல பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.