சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகே புதுப்பட்டி பகுதியில் மின்ஒயர் தாழ்வாக செல்கிறது. இதனால் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் பயணிக்க அச்சம் அடைகின்றனர். தாழ்வாக செல்லும் மின்ஒயர்களால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மின்ஒயர்களை உயர்த்தி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.