சுசீந்திரம்- மருங்கூர் நெடுஞ்சாலையில் நல்லூர் பகுதியில் சாலையோரத்தில் மின்கம்பிகள் செல்லும் வழித்தடத்தில் 4 நான்கு பனைமரங்கள் உள்ளன. இவற்றி ஓலைகள் மின்கம்பியில் பின்னியபடி உள்ளன. இதனால் தீ விபத்துகள் ஏற்பட்டு மின் கம்பிகள் துண்டிக்கப்படலாம். அப்படி துண்டிக்கப்பட்டால் சாலையில் செல்வோரும் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மின்கம்பிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்படும் பனைமரத்தின் ஓலைகளை மட்டும் வெட்டி அகற்றி மின் வினியோகத்தையும், பனைமரத்தையும் காத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.