மின்கம்பத்தால் விபத்து அபாயம்

Update: 2024-11-17 17:46 GMT
கடலூர் நேரு நகரில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து உள்ளே உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதன் காரணமாக அந்த மின்கம்பம் உறுதித்தன்மையை இழந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அவ்வழியே செல்ல அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்