சென்னை புழல், பஜனை கோவில் தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தை சுற்றிலும் செடி, கொடிகள் அடர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழைகாலம் என்பதால் இந்த பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல அச்சப்படுகின்றனர். மேலும், அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் மின்கம்பம் மீது உள்ள செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.