கரூர் மாவட்டம் புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, தோட்டக்குறிச்சி வழியாக செல்லும் வாய்க்கால் ஒரத்தில் மின்மாற்றி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் தற்போது இந்த மின் மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைத்து மின்மாற்றியை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.