எலும்பு கூடான மின்கம்பம்

Update: 2024-11-17 11:20 GMT

திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகர் 5-வது குறுக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலையோரம் மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. எனவே இந்த மின்கம்பம் மழைபெய்யும்போதும், பலத்த காற்று அடிக்கும்போதும் முறிந்து கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்