மின்கம்பம் இருக்கு; மின்விளக்கு இல்லை

Update: 2024-11-17 10:09 GMT

திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகாவில் திருக்கொள்ளம்புதூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் ஈமக்கிரியை மண்டபம் இல்லை. முறையான சாலை வசதி மற்றும் மின்விளக்கு வசதி இல்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்விளக்கு வசதிக்காக மின்கம்பங்கள் நடப்பட்டன. ஆனால் தற்போது வரை மின்விளக்குகள் பொருத்தப்படாமல் மின்கம்பம் மட்டும் காட்சி பொருளாக இருக்கின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து திருக்கொள்ளம்புதூர் கிராமத்துக்கு சாலை வசதி, மின்விளக்கு வசதி மற்றும் ஈமக்கிரியை மண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்