திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் சோதனை சாவடி அருகே உள்ள பூஜை கரை சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பங்களில் ஒரு சிலவற்றில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. மேலும் ஆபத்தான நிலையில் உள்ள இந்த மின்கம்பங்கள் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது, முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.