சிதம்பரம் காந்தி சிலையில் இருந்து அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு செல்லும் மேம்பாலத்தில் இரவு நேரத்தில் சாலையின் நடுவில் தடுப்புக்கட்டை இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதாக தெரியும் வகையில் ஒளிரும் விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. இந்த விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அங்குள்ள தடுப்புக்கட்டையில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.