புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, வடகாடு பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் செடி, கொடிகள் படர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் மழைபெய்யும் போது இந்த மின்கம்பங்களின் அருகில் மின் கசிவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.