அரியலூர்-திருச்சி புறவழிச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் மாவட்ட போலீஸ் அலுவலகம் முன்புள்ள சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் அப்பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு போதுமான அளவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.