ஆபத்தான மின்மாற்றி

Update: 2024-11-10 11:35 GMT

அரியலூர் ரெயில் நிலையம் சாலையில் மிகவும் தூர்ந்துபோன நிலையில் மின்மாற்றி ஒன்று காணப்படுகிறது. இந்த மின்மாற்றியின் வழியாக அப்பகுதியில் உள்ள பல்வேறு கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் இந்த மின்மாற்றியில் உள்ள சிமெண்டு பூச்சுகள் அனைத்தும் பெயர்ந்து இரும்புக்கம்பிகள் வெளியில் தெரியும் வகையில் உள்ளது. இதனால் இந்த மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் அபாயம் உள்ளது. மேலும் சாலையில் செல்பவர்கள் மீது விழுந்தால் உயிரிழப்பு ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே மின்சாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து உரிய கவனம் செலுத்தி சேதமடைந்த மின்மாற்றியை அகற்றி புதிய மின்மாற்றியை செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்