திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் அருகே பி.காப்பிலியப்பட்டியில் மின்கம்பம் சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மின்கம்பம் முறிந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.