மின் கம்பம் அமைத்தும் பலன் இல்லை

Update: 2024-11-03 12:45 GMT

கரூர் மாவட்டம் நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானத்திற்கு செல்லும் தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டு அந்த கம்பத்தின் வழியாக மின் கம்பிகள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த கம்பத்தில் இருந்து அருகில் உள்ள விவசாய தோட்டத்தின் மின்மோட்டோர்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் அருகே மின்மாற்றியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின்கம்பத்தில் இருந்த காங்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பம் நெடுவிலும் கம்பிகள் தெரிகிறது. இதன் காரணமாக அதன் அருகே புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. புதிய மின் கம்பம் நடப்பட்டு சுமார் ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இருப்பினும் மின் கம்பிகள் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்