குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட ரீத்தாபுரம் பஞ்சாயத்து சலேட் நகர் பகுதியில் தெருச்சாலையில் அலங்கார தரைக்கற்கள் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது சாலையின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.