வேடசந்தூர் அருகே வ.உ.சி. நகர் செல்லும் பிரிவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. மேலும் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிவதால் எப்போது வேண்டுமானாலும் அது முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு, புதிய மின்கம்பம் நட்டு வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.