கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம்-பாலத்துறை வரை தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலம் அமைக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பாலத்திற்கு மேலும், பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள சர்வீஸ் சாலையிலும் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.