சாய்ந்த நிலையில் மின்மாற்றி

Update: 2024-10-20 12:53 GMT

திருவாரூர்-மன்னார்குடி சாலை தேவர்கண்டநல்லூர் பெட்ரோல் பங்க் அருகே சாலையோரத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. மின்மாற்றியின் அடிப்பகுதியில் உள்ள சிமெண்டு தளம் சேதமடைந்து இருக்கிறது. இதனால் தற்போது மின்மாற்றி சாய்ந்த நிலையில் இருக்கிறது. மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்துவிடும் நிலையில் இருப்பதால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்