சேதமடைந்த மின்கம்பங்கள்

Update: 2024-10-20 12:41 GMT

அரியலூர்-திருச்சி சாலையில் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையோரம் உள்ள மின்கம்பங்கள் துருப்பிடித்தும், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இந்த மின்கம்பங்கள் எளிதில் வலுவிழந்து கீழே விழ வாய்ப்புள்ளது. இதுபோன்ற சமயங்களில் அந்த வழியாக செல்பவர்கள் மீது மின்கம்பங்கள் விழுந்தால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இதுகுறித்தும் நடவடிக்கை எடுத்து பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறா வண்ணம் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்