குலசேகரபுரம் ஊரில் பிள்ளையார் கோவில் செல்லும் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் முறிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றிட வேண்டும்.
-அய்யப்பன், குலசேகரபுரம்.