அந்தியூரில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை செல்லும் சாலையில் சாய்பாபா கோவில் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் தெருவிளக்குகள் எதுவும் பொருத்தப்படவில்லை. அதிக போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் இரவு, பகலாக அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து தமிழ்நாடு போக்குவரத்து கழக பணிமனைக்கு பஸ்கள் சென்று கொண்டிருக்கின்றன. சாலையில் தெருவிளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி தெருவிளக்குகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.