அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோவிலுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த கோவிலுக்கு செல்லும் சாலையானது இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. போதிய அளவில் மின்விளக்குகள் அமைக்கப்படாமலும், ஏற்கனவே இருக்கும் ஒருசில மின்விளக்குகள் எரியாமல் இருப்பதும் இதற்கு காரணமாகும். இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு போதுமான அளவில் மின்விளக்குகள் சரிவர எரிவதை உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.