அந்தியூர் செம்புளிச்சாம்பாளையம் அருகே ஒட்டபாளையம் கிராமத்துக்குட்பட்ட கிழக்குக்காட்டில் இருந்து தாண்டாம்பாளையம் செல்லும் வழியில் மிகவும் பழுதடைந்த நிலையில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. இதிலுள்ள கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே அசம்பாவித சம்பவங்கள் நடப்பதற்குள் ஆபத்தான நிலையில் உள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.