உத்தமபாளையம் பகுதியில் அறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் வீடுகளில் பகலில் வெப்பத்தின் தாக்கத்தை தாங்க முடியாமல் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே தடையின்றி மின்சார வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.