செங்கல்பட்டு மாவட்டம், சித்தாலபாக்கம் பஜனை கோயில் தெருவில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், மின்தடை ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு பின்னரே மின்தடை சரிசெய்யப்படுகிறது. எனவே, மின்சாரதுறை உயர் அதிகாரிகள் அடிக்கடி ஏற்படும் மின்தடையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.