சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் அணைக்கட்டு அருகே உள்ள வயல்வெளி பகுதி வழியாக செல்லும் உயர் அழுத்த மின்கம்பிகள் அடிக்கடி அறுந்து கீழே விழுந்து விடுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள கரும்பு தோட்டம் அடிக்கடி தீப்பிடித்து எரிந்து வருவதால் விவசாயிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மின்கம்பியால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.