புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கருகப்புலாம்பட்டி கிராமத்தில் ஊரின் நுழைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரிதும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.