எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பம்

Update: 2024-09-29 12:19 GMT

எலும்புக்கூடாக காட்சியளிக்கும் மின்கம்பம்

திருப்பூர் மாநகரம் பழைய ராமகிருஷ்ணாபுரம் 2-வது வீதி விரிவில் உள்ள சாலையோரம் ஒரு மின்கம்பம் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது. இரும்பு கம்பிகள் துருபிடித்த நிலையில் வெளியே தெரிந்தபடி உள்ளது. இந்த மின்கம்பம் எப்போது நொடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளது. பலத்த காற்றடிக்கும் நேரத்தில் மின்கம்பம் ஆடுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

பனியன் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி, புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.

சிவா,திருப்பூர்.

89887 47743

மேலும் செய்திகள்