கம்மாபுரம் அருகே வேப்பங்குறிச்சியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கிநிற்கும் கம்பத்தின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றது. தற்போது அந்த மின்கம்பம் உடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே மின்விபத்து ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பம் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.