பழைய மின்கம்பத்தை மாற்ற கோரிக்கை

Update: 2024-09-22 13:06 GMT
கரூர் மாவட்டம் நடையனூரில் இருந்து பேச்சிப்பாறை நவீன எரிவாயு மயானத்திற்கு செல்லும் தார் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின் கம்பம் நடப்பட்டது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் தெரிகிறது. இதன் காரணமாக அதன் அருகே புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. புதிய மின் கம்பம் நடப்பட்டு சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது .இருப்பினும் பைழய மின் கம்பம் அப்படியே உள்ளது. இதனால் பழைய மின்கம்பம் கீழே விழும் முன்பு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்