பாளையங்கோட்டை மகாராஜாநகர் சரண்யாநகர் பூங்காவில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவில் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அதிகாலை, மாலையில் பூங்காவுக்கு நடைப்பயிற்சி செல்கிறவர்கள், குழந்தைகள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே பூங்காவில் மின்விளக்குகள் மீண்டும் ஒளிர்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.