திசையன்விளை 2-வது வார்டு இட்டமொழி சாலையில் உள்ள மின்கம்பங்கள் சேதமடைந்து கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து பலத்த காற்றுக்கு விழுந்து விடும் நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.