எரியாத தெருவிளக்கு

Update: 2024-09-01 11:26 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தாலுக்கா, அண்ணங்காரக்குப்பம் வன்னியர் தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் எதிரி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தெருவிளக்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த தெரு விளக்கு கடந்த சில நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால், சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பெண்கள் இப்பகுதியில் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்