பரங்கிப்பேட்டை அன்னங்கோவில் மீன்பிடி இறங்கு தளத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றன. இதில் அங்கு சாலையின் நடுவில் உள்ள மின்கம்பங்களை சாலையோரத்தில் மாற்றி அமைக்காமல் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.