திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 110-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள நூலகத்தின் பின்புறத்தில் தொடர்ந்து 3 மின்கம்பங்கள் ஆபத்தான நிலையில் சிதலமடைந்து உள்ளது. மின்கம்பம் வழியாக செல்வதற்கு மாணவர்கள், பெண்கள் மிகுந்த அச்சம் அடைகின்றனர். உயிர்சேதம் ஏற்படுவதற்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக புதிய கம்பத்தைஅமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.