மின்விளக்கு எரியவில்லை

Update: 2024-08-25 14:13 GMT

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரி செல்லும் வழியில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் கடும் அவதியடைகின்றனர். மேலும் விஷப்பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்திலேயே பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். திருட்டு சம்பவங்களும் நடக்க வாய்ப்பு உள்ளதால் ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின்விளக்கை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்