சென்னை திரு.வி.க.நகர், கோபாலபுரம் முதலாவது தெருவில் மின்பெட்டி ஒன்று உள்ளது. இந்த பெட்டி ஆபத்தான முறையில் சாய்ந்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் இருப்பதால் அந்த பகுதியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். மேலும் குழந்தைகள் விளையாடும் பகுதி என்பதால் ஆபத்தை உணர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின் பெட்டியை அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.