அரியலூர் அண்ணா சிலை ரவுண்டானா முதல் கல்லங்குறிச்சி ரவுண்டானா வரையிலும் உள்ள சாலையில் போதுமான அளவில் மின்விளக்குகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் மாடு மற்றும் தெருநாய்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால் இரவில் சாலையின் நடுவே இவை நின்றால் கூட வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு போதுமான அளவில் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.