தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2024-08-25 12:39 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தர்ஹா வளாகம் உரூஸ் மைதானம் அருகில் புனித சவேரியார் ஆலயம் செல்லும் ரோட்டின் அருகில் ஒரு மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் இருந்தது. இப்பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் ஒரு பள்ளி உள்ளதால் மாணவ- மாணவிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அரவக்குறிச்சி தர்கா வளாகம் உருஸ் மைதானம் அருகில் உள்ள சிதிலமடைந்த மின்கம்பம் மாற்றப்பட்டது. இது தொடர்பாக செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கும் அரவக்குறிச்சி பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்