கடலூர் பீச் ரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகத்தின் எதிரே மின் கம்பத்தில் மரக்கிளைகள் படர்ந்து இருந்ததால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உருவானது. இதுகுறித்த செய்தியானது கடந்த வாரம் புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து மின்கம்பத்தில் படர்ந்து இருந்த மரக்கிளைகளை அதிகாரிகள் அகற்றினர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.