ஒட்டன்சத்திரம் தாலுகா கோம்பை கிராமத்தில் 3-வது வார்டில் மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.