வெளிச்சத்தை மறைக்கும் மரக்கிளைகள்

Update: 2024-08-18 11:31 GMT

திருச்சி மாவட்டம், திருவானைக்கோவில் நான்காம் பிரகார வீதியான தெற்கு உள்வீதியும், கீழ உள்வீதியும் இணையும் கீழ உள்வீதியின் மேல்புறம் சாலையோரம் மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் நன்கு வளர்ந்தும், அடர்ந்தும் காணப்படுவதால் இரவு நேரங்களில் தெருவிளக்கின் வெளிச்சம் தெரியாத அளவிற்கு இருள் சூழ்ந்த நிலையில் பொதுமக்கள் அவ்வீதிகளை அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே மரக்கிளைகளை அப்புறப்படுத்தி நன்கு வெளிச்சம் தெரியும்படி செய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்