கோத்தகிரி மார்க்கெட் திடல் பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இந்த பகுதியில் பள்ளிக்கூடங்கள் உள்ளதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் நடமாட்டம் காலை, மாலை நேரங்களில் அதிகளவில் இருக்கிறது. மேலும் மார்க்கெட்டுக்கு தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். இதனால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக உள்ளது. ஆனால் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த மின்கம்பிகளை உயர்த்தி கட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும்.