திருவள்ளூர் மாவட்டம் மாத்தூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 3-வது மெயின்ரோடு ஏரிக்கரை தெருவில் ஆபத்தான நிலையில் மின்பெட்டி திறந்து இருந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் மின்வாரிய துறை அதிகாரிகள் வந்து அதனை சரி செய்தனர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் துணை நின்ற "தினத்தந்தி"-க்கும் அப்பகுதி மக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்தனர்.