கண்டமனூர் கிராமத்தில் கணேசபுரம் சாலையோரத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் தூண்கள் சேதமடைந்துள்ளது. இந்த தூண்களின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் தூண்கள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழுந்து மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த தூண்களை மாற்ற மின்வாரியம் நடிவடிக்கை எடுக்க வேண்டும்.