ஒட்டன்சத்திரம் தாலுகா கோம்பை 3-வது வார்டு பகுதியில் உள்ள மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து சேதமடைந்துள்ளது. தற்போது அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டு வைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.