குளச்சல் அரசு மருத்துவமனை அருகில் ஒரு உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்விளக்குகள் பழுதடைந்து கடந்த சில மாதங்களாக ஒளிராமல் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனல், இரவு நேரங்களில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி பழுதமடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்கை பொருத்தி ஒளிரவைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அமீன், குளச்சல்.