திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், காரனோடை இருந்து சீமாவரம் செல்லும் சாலையில் புது குப்பம் கிராமத்தில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றி மிகவும் சிதலமடைந்து உள்ளது. மேலும், மின்மாற்றியில் இருந்து மின் கம்பிகள் ஆபத்தான முறையில் கீழே தொங்குகிறது. எனவே, இந்த மின்மாற்றி மூலம் மின்சாரம் விநியோகம் செய்யப்படும் அனைத்து பகுதிகளிலும் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. ஆபத்தை உணர்ந்து மின்வாரிய துறை அதிகாரிகள் இந்த பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.